தமிழக செய்திகள்

தனியார் நிறுவன ஊழியரிடம் நகை பறிப்பு

திருவள்ளூர் அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி நகையை பறித்து சென்ற 2 நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் சதீஷ்குமார் தனது நண்பர் சுதாகர் என்பவருடன் அந்த பகுதியில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் திடீரென கத்தியை காட்டி சதீஷ்குமார் அணிந்து இருந்த 3 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் சுதாகர் வைத்திருந்த ஒரு செல்போனையும் பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர்.

இது குறித்து சதீஷ்குமார் மணவாளநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு