சென்னை
கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலையில் நிலையற்ற சூழல் நிலவி வருகிறது. அமெரிக்க டாலர் மதிப்பு சரியும்போது தங்கத்தின் விலையும் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 40,024 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 5 ஆயிரத்து 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 70 காசுகள் குறைந்து 72 ரூபாயாக விற்கப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ 700 ரூபாய் குறைந்து 72 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.