சென்னை,
கொரோனா வைரஸ் பாதிப்பால் தெழில்துறை தேக்கம் குறித்த பீதி நிலவி வரும் நிலையில், தங்கம் விலையில் தற்போது ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன. கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 328 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,805க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.38,440க்கும் விற்பனை செய்யப்பட்டுகிறது. அதே சமயம் வெள்ளியின் விலை இன்று கிலோவுக்கு ரூ.2,700 குறைந்துள்ளது.