தமிழக செய்திகள்

சிங்கப்பெருமாள்கோவில் அருகே வங்கி அதிகாரி வீட்டில் நகை திருட்டு - போலீசார் விசாரணை

சிங்கப்பெருமாள்கோவில் அருகே வங்கி அதிகாரி வீட்டில் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது‌. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள்கோவில் அருகே உள்ள செங்குன்றம் வரதராஜ நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 63). இந்தியன் வங்கி துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். நேற்று முன்தினம் வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 20 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இது குறித்து பாலகிருஷ்ணன் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்