சிவகங்கை
சிவகங்கை மாவட்டம் செந்தமிழ் நகரை சேர்ந்த மகேஷ்பாபு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகின்றார். இவர் மாநில நகை மதிப்பீட்டாளர் சங்க செயல் தலைவர் பெறுப்பிலும் உள்ளார்.
இந்த நிலையில் சிவகங்கை மருதுபாண்டியர்நகர் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டு உள்ள வாக்குச்சாவடிக்கு தனது வாக்கை பதிவு செய்வதற்காக மகேஷ்பாபு வந்தார்.
வாக்குச்சாவடி அருகே வந்தவுடன் அவர் அணிந்திருந்த ஆடைகளை களைந்து அரை நிர்வாண கோலத்தில் நகை மதிப்பீட்டாளர்களின் பணியை நிரந்தரப்படுத்த கோரிய பதாகையை கழுத்தில் தொங்கவிட்டப்படி வாக்களிக் முயன்றார்.
அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாரிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி போலீசார், ஆடைகளை அணியவைத்து வாக்குப்பதிவு செய்ய அனுமதித்தனர்.
அரை நிர்வாண கோலத்தில் வாக்களிக்க வந்த நகை மதிப்பீட்டாளரால் வாக்குச் சாவடியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.