தமிழக செய்திகள்

கடலூர் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருட்டு

கடலூர் அருகே விவசாயி வீட்டில் நகை-பணம் திருடியது தொடாபாக போலீசா விசாரைண நடத்தி வருகின்றனா.

தினத்தந்தி

கடலூர் அருகே உள்ள திருமாணிக்குழி பகுதியை சேர்ந்தவர் அருள்ஜோதி(வயது 43), விவசாயி. இவர் சம்பவத்தன்று காலை தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார். பின்னர் மதியம் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது, பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. இதை கண்டு திடுக்கிட்ட அவர், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் உள்ள பீரோவில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தது. மேலும் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சத்தை காணவில்லை.

குடும்பத்துடன் வெளியில் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பின்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை-பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகை-பணத்தின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்