தமிழக செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம்:ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதா?‘வாட்ஸ்-அப்’பில் பரவும் காட்சிகளால் பரபரப்பு

சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் பிரேத பரிசோதனை வீடியோ வெளியானதாக பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சாத்தான்குளம்,


சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். பின்னர் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதையடுத்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி, சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 போலீசார் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரையில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரது பிரேத பரிசோதனை வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ வாட்ஸ்-அப்பில் பரவி வருகிறது. அதில், காயங்களுடன் இருந்த 2 உடல்களுக்கு பிரேத பரிசோதனை நடப்பது போன்றும், அதை மாஜிஸ்திரேட்டு ஒருவர் பார்வையிடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. மேலும் இறந்தவர்களின் உறவினர் ஒருவர் மாஜிஸ்திரேட்டு காலில் விழுந்து நீதி வழங்குமாறு கூறி கதறி அழுவது போன்ற காட்சிகளும் இடம்பெற்று உள்ளன.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு