தமிழக செய்திகள்

ஆயுதப்படை போலீசாருக்கு கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு

ஆயுதப்படை போலீசாருக்கு கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நிறைவு பெற்றது.

தினத்தந்தி

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கு ஆண்டுதோறும் 15 நாட்கள் கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான கூட்டுத்திரள் கவாத்து பயிற்சி ஆயுதப்படை போலீசாருக்கு கடந்த 21-ந்தேதி தண்ணீர்பந்தலில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கியது. போலீசாருக்கு அன்றாட பணிகள் குறித்தும், மைதானத்தில் பின்பற்றப்படும் கவாத்துகள் குறித்தும் நினைவூட்டும் பயிற்சி காலை முதல் மாலை வரை நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியன் முன்னிலையில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் பயிற்சி நடைபெற்றது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷியாமளா தேவி பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் போலீசாருடன் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்து, அதனை நிவர்த்தி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்