தமிழக செய்திகள்

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் ஜூன் 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை

ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரத்தில் வருகிற ஜூன் 13-ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கீழக்கரை,

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற மஹான் சுல்தான் செய்யது இபுராகிம் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா உள்ளது. இந்த தர்காவில் 849-ம் ஆண்டு சந்தனக்கூடு எனும் மத நல்லிணக்க திருவிழா வருகிற ஜூன் 12-ந் தேதி மாலை தொடங்கி ஜூன் 13-ந் தேதி அதிகாலை தர்கா மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். இதனை தொடர்ந்து ஜூன் 19-ந் தேதி நிறைவு நிகழ்ச்சியான அஸர் தொழுகைக்குப் பின் கொடியிறக்கம் நடைபெறும்.

இந்த நிலையில் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற ஜூன் 13-ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். விடுமுறை நாளுக்குப் பதிலாக ஜூன் 24-ந்தேதி வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து