தமிழக செய்திகள்

கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ரசாயன அலுவலர் தேர்வு

மாநில அளவில் சிறந்த தலைமை அலுவலராக கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ரசாயன அலுவலர் தேர்வு

தினத்தந்தி

கச்சிராயப்பாளையம்

மாநில அளவில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் பணிபுரியும் தலைமை ரசாயன பிரிவு அலுவலர்களுக்கான சிறந்த தலைமை ரசாயன பிரிவு அலுவலராக கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரியும் தலைமை ரசாயன பிரிவு அலுவலர் ஜோதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு தேசிய சர்க்கரை துறை நிறுவன பேராசிரியர் நரேந்திர மோகன், தேசிய சர்க்கரை பிரிவு பாரதியா சுகர் நிர்வாக தலைவர் விக்ரம்சிங் பி ஷிண்டே மற்றும் தமிழ்நாடு தலைமை சர்க்கரை வேதியியலாளர் முத்துவேலப்பன் ஆகியோர் கொண்ட குழு சிறந்த ரசாயன பிரிவு தலைமை அலுவலருக்கான சான்றிதழ் மற்றும் கோப்பையை வழங்கினார்கள். சிறந்த ரசாயன பிரிவு அலுவலராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோதி கச்சிராயப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் முருகேசனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது தொழிலாளர் நல அலுவலர் சிங்காரவேல், அலுவலக மேலாளர் சரவணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு