திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே விண்ணமங்கலம் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கைலாசநாதர் கோவிலில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கமண்டல நாகநதி ஆற்றில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர், கோவிலின் கோபுர கலசத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை அடுத்து, பக்தர்களுக்கு அன்னதானமுன் வழங்கப்பட்டது.