தமிழக செய்திகள்

கஜா புயல்; 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கஜா புயல் எச்சரிக்கையை அடுத்து 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கஜா புயல் நாகையின் வடகிழக்கே 138 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. கரையை கடக்கும்போது 80 கி.மீ முதல் 90 கி.மீ வரை காற்று வீசும். சில நேரத்தில் 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

கடலூரில் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தஞ்சை, திருவாரூர், ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நாகையில் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு உள்ளது. இதேபோன்று புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அரசு பேருந்துகளின் இயக்கம் நிறுத்தப்பட்டு உள்ளன.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்