தமிழக செய்திகள்

கழுகுமலை வேடசாமி கோவில் கொடை விழா

கழுகுமலை வேடசாமி கோவில் கொடை விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

கழுகுமலை:

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு பாத்தியப்பட்ட வேடசாமி கோவிலில் 41-வது ஆண்டு கொடை விழா கடந்த 6-ந்தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. 5-ந்தேதி மதியம் 2 மணிக்கு மாக்காப்பு பூஜையும், 7-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம் பூஜையும் நடைபெற்றது. நேற்று காலை 9 மணியளவில் திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து பகல் 12 மணிக்கு சுவாமிக்கு பாலாபிஷேகம், உச்சிகால பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு வில்லிசை கச்சேரி மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை பூஜை நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்