தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்: மின்னல் தாக்கி 3 பெண்கள் சாவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் பெத்தானூர் கிராமத்தை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட பெண் கூலி தொழிலாளர்கள் நேற்று மதியம் கருங்குழி கிராமத்தில் நெற்பயிர் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த சமயத்தில் அப்பகுதியில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

அப்போது நடவு பணியில் ஈடுபட்டிருந்த பெத்தானூரை சேர்ந்த செந்தில் மனைவி உமா (வயது 30), ராமர் மனைவி பெரியம்மாள்(40) ஆகியோரை மின்னல் தாக்கியது. இதில் அவர்கள் 2 பேரும் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மின்னல் தாக்கி பலியான பெரியம்மாளின் கணவர் கடந்த ஆண்டு கொரோனாவால் இறந்தார். இதனால் பெற்றோரை இழந்து பெரியம்மாளின் 3 குழந்தைகளும் பரிதவித்து வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்

இதேபோல் கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தில் வசிக்கும் பெரியசாமி மனைவி முனியம்மாள் (53). நேற்று மதியம் மழை பெய்தபோது வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரை மின்னல் தாக்கியது. இதில் முனியம்மாள் பரிதாபமாக இறந்து விட்டார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்