தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பொறுப்பு ஏற்று கொண்டார்.

தினத்தந்தி

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக பணிபுரிந்து வந்த விஜய்பாபு சேலம் மாவட்டத்திற்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் ஆவின் பொது மேலாளராக பணியாற்றி வந்த சத்தியநாராயணன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலராக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்று கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணனை வருவாய்த்துறை அதிகாரிகள் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது