தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி விவகாரம்: விசிக போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுப்பு

விஷ சாராய மரண விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷசாராயம் அருந்தியதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசை கண்டித்து அதிமுக, பாஜக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் போராட்டத்தை அறிவித்தன. ஆனால், இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி மறுத்தார்கள். இருப்பினும் தமிழக பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது. இன்று அதிமுக சார்பில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணங்களை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்திருந்த போராட்டத்திற்கு சென்னை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். சென்னை வள்ளூவர் கோட்டத்தில் இன்று மாலை 4 மணிக்கு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை