தமிழக செய்திகள்

கள்ளக்குறிச்சி வன்முறை அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம் - எடப்பாடி பழனிசாமி

கள்ளக்குறிச்சி வன்முறை அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

தினத்தந்தி

சென்னை:

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது:-

கள்ளக்குறிச்சி சம்பவம் 13-ம் தேதியே நடந்துவிட்டது. 17-ம் தேதியன்றுதான் வன்முறைச் சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. அரசின் மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியத்தின் காரணமாக இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது.

13-ம் தேதியிலிருந்து 16-ம் தேதி வரை மாணவியின் பெற்றோர், தொலைக்காட்சி வாயிலாக பேட்டி அளித்து வந்துள்ளனர். கொந்தளிப்பான, பதற்றமான சூழல் அங்கு நிலவி வருகிறது. உளவுத் துறை மூலம் தமிழக அரசு தகவல் சேகரித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால், வன்முறையை தவிர்த்திருக்கலாம்.

உளவுத்துறை செயலற்றுள்ளதால், இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. தற்போது பள்ளியின் தாளாளர், முதல்வர் மற்றும் செயலாளர், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த அசம்பாவிதங்களைத் தவிர்த்திருக்கலாம். அதனால், இந்த அரசை செயலற்ற அரசாங்கம் என்று கூறுகிறேன்.

சென்னை: "கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், 3 நாட்களாக அரசு மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியமாக இருந்ததால் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வருகிறது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "கள்ளக்குறிச்சி சம்பவம் 13-ம் தேதியே நடந்துவிட்டது. 17-ம் தேதியன்றுதான் வன்முறைச் சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளது. அரசின் மெத்தனப்போக்கு மற்றும் அலட்சியத்தின் காரணமாக இதுபோன்ற வன்முறை நடந்துள்ளது என கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்