பொங்கலூரை அடுத்த கள்ளிப்பாளையம் பகுதியில் கள் விற்பனை செய்வதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் கள்ளிப்பாளையத்தை சேர்ந்த கங்கை அமரன் (வயது 45) என்பவரிடம் 5 லிட்டர் கள்ளும், அதே பகுதியைச்சேர்ந்த குமரேசன் (35) என்பவரிடமிருந்து 5 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்தனர்.
அதுபோல் காட்டூரைச் சேர்ந்த சங்கர் (35) என்பவரிடம் இருந்து 5 லிட்டர் கள்ளும் பறிமுதல் செய்தனர். இவர்கள் 3 பேரையும் பாலீசார் கைது செய்தனர்.