தமிழக செய்திகள்

கமலின் முதல் பொதுக்கூட்டம் பிப்ரவரி 21-ல் மதுரையில் நடைபெறுகிறது

கமலின் முதல் பொதுக்கூட்டம் பிப்ரவரி 21-ம்தேதி மாலை மதுரையில் நடைபெறுகிறது என்று அகில இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு கூறியுள்ளார்.

சென்னை,

நடிகர் கமல் ஹாசன் தனது அரசியல் வருகையை கடந்தாண்டு உறுதி செய்தார். இதையடுத்து தனது நற்பணி மன்ற நிர்வாகிகள் உடன், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். வரும் பிப்ரவரி 21ஆம் தேதி கட்சி பெயரை அறிவித்து, அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் அகில இந்திய நற்பணி இயக்க பொறுப்பாளர் தங்கவேலு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து நாளை நமதே என்ற பயணத்தை பிப்ரவரி 21-ம் தேதி கமலஹாசன் தொடங்குகிறார். கமலின் முதல் பொதுக்கூட்டம் பிப்ரவரி 21-ம்தேதி மாலை மதுரையில் நடைபெறும். தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,கேரளாவில் உள்ள ரசிகர்கள் கலந்து கொள்ள வருமாறு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.