சென்னை,
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 284வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருவருக்கும் பல்வேறு நாட்டு தலைவர்கள், அரசியல் கட்சிகள், அமைச்சர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், அமெரிக்காவின் அதிபர் மற்றும் துணை அதிபராக தேர்வான ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துக்கள்.
துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய-அமெரிக்கர் என்ற முறையில், அவர் ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு உத்வேகம். துணை அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, அவரது பூர்வீக ஊரான துளசேந்திரபுரம் கிராமம் உலக வரலாற்றில் ஒரு இடத்தைக் பிடித்துள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.