தமிழக செய்திகள்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரிடம் நேரில் நலம் விசாரித்தார் கமல்ஹாசன்

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் டி.ராஜேந்தரை கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

தினத்தந்தி

சென்னை,

நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தருக்கு கடந்த மாதம் 19-ம்தேதி உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், இதயத்துக்கு செல்லக் கூடிய ரத்த குழாயில் அடைப்பு இருப்பதைக் கண்டனர்.

அவருக்கு அமெரிக்காவில் உள்ள புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக சென்னையில் இருந்து டி.ஆர். அமெரிக்கா புறப்பட்டு செல்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், டி.ஆரை மருத்துவமனைக்கு நேரில் சந்தித்து கமல்ஹாசன் நலம் விசாரித்தார். மேலும், டி.ஆருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவீட்டரில் பகிர்ந்த கமல்ஹாசன், நலமுடன் திரும்பி வாரும் சகோதரரே என்று அவர் தன்னுடைய டுவீட்டர் பதிவில் கூறியுள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து