சென்னை,
கேரள முதல்வர் பினராயி விஜயன், அவரின் மனைவி ஆகியோர் திருவனந்தபுரத்தில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கு மேல் சென்னை வந்தனர். கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டார் என்று முதல்வர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று வழக்கமான உடல் பரிசோதனைகள் முடிந்தபின் நாளை திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த கேரள முதல் மந்திரி பினராயி விஜயனை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சந்தித்து நலம் விசாரித்தார். சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல்வர் பினராயி விஜயனுடன் சிறிது நேரம் பேசிய, கமல் ஹாசன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.