தமிழக செய்திகள்

பொது நிகழ்ச்சியில் பங்கேற்பு:கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் - சுகாதாரத்துறை செயலாளர்

பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கடந்த மாதம் அமெரிக்க பயணத்தை முடித்துவிட்டு தமிழகம் திரும்பியபோது காய்ச்சல் மற்றும் இருமல் இருந்தது. இதையடுத்து சென்னையை அடுத்த போரூரில் உள்ள ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 22-ந்தேதி கமல்ஹாசன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆனது. அதைத்தொடர்ந்து தனிமைபடுத்தப்பட்டு அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. அதையடுத்து கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்த கமல்ஹாசன் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் வீடு திரும்பினார். அவரை வீட்டு தனிமையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். ஆனால் வீட்டு தனிமையில் இல்லாமல் கமல்ஹாசன் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாட்களிலேயே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என்று சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டிருந்தாலும், அதன் பின் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும் என்பதுதான் நடைமுறை. அதனை மீறி அவர் செயல்பட்டதற்கு சரியான விளக்கம் கேட்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு