தமிழக செய்திகள்

காமராஜர் பிறந்த நாள் விழா

காமராஜர் பிறந்த நாள் விழா

தினத்தந்தி

நாகையில் நாடார் உறவின்முறை சங்கம் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சங்க தலைவர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சந்தன மாரிமுத்து முன்னிலை வகித்தார். பொருளாளர் ரவி வரவேற்றார். துணைத் தலைவர் விஜயகுமார், சங்க ஆலோசகர்கள் காளிமுத்து, விஜய் ஆகியோர் கலந்து கொண்டு பேசியனர். விழாவில் காமராஜர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதையடுத்து நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு இலவச நோட்டு-புத்தகம், பேனாக்கள் வழங்கப்பட்டன. முடிவில் காப்பாளர் தங்க பெருமாள் நன்றி கூறினார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்