தமிழக செய்திகள்

காமராஜர் பிறந்தநாள் விழா

நெல்லையில் காமராஜர் பிறந்தநாள் விழா காண்டாடப்பட்டது.

தினத்தந்தி

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு, நெல்லை சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு தி.மு.க. அயலக அணி சிங்கப்பூர் துணை பொறுப்பாளர் எஸ்.ஜே.மகா கிப்ட்ஸன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுரண்டையில் நாடார் எழுச்சி பேரவை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, கல்வியில் சிறந்த மாணவ- மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, ஆதரவற்றோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா சிவகுருநாதபுரம் காமராஜர் சிலை முன்பு நடந்தது. நாடார் எழுச்சி பேரவை மாநில தலைவர் வக்கீல் எம்.சின்னதம்பி தலைமை தாங்கினார். நகர தலைவர் பால்சாமி, மகாத்மா காந்தி கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகசுந்தரம், காமராஜர் சிலம்பாட்ட குழு செயலாளர் வி.கே.ரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிவகங்கை மாவட்ட பேரவை செயலாளர் டைசன் வரவேற்றார். தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார், தி.மு.க அயல்நாட்டு அணி துணை பொறுப்பாளர் சிங்கப்பூர் எஸ்.ஜே.மகா கிப்ட்ஸன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில் நெல்லை நாடார் உறவின்முறை நிர்வாகிகள் அசோகன், மகாலிங்கம், நாடார் எழுச்சி பேரவை பொருளாளர் முருகேசன், காமராஜர் சிலம்பாட்ட குழு தலைவர் பாண்டி நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் கனகருண் நன்றி கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு