தமிழக செய்திகள்

காமராஜர் பிறந்த நாள் விழா

அரக்கோணத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தினத்தந்தி

அரக்கோணம் டாக்டர் வி.ஜி.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் என்.தனபால் நாயுடு தலைமை தாங்கினார். செயலாளர் கே.எம்.தேவராஜ் நாயுடு வரவேற்றார். இணை செயலாளர் கே.மோகன் ரங்கசாமி நாயுடு மற்றும் உறுப்பினர் டி.எஸ்.முரளி நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பள்ளி மாணவ, மாணவிகள் காமராஜர் பற்றிய சிறப்புகள் குறித்து எடுத்துரைத்தனர். முடிவில் பள்ளி முதல்வர் டாக்டர் வி.வனிதா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்