தமிழக செய்திகள்

பள்ளிப்பட்டில் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

பள்ளிப்பட்டில் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தேரடி தெருவில் ஊராட்சி ஒன்றிய பிரதான தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக பொங்கல், வடை, கேசரி ஆகியவை வழங்கப்பட்டன.

அதன் பிறகு பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் இந்த கல்வி ஆண்டில் புதியதாகச் சேர்ந்த 30 மாணவ, மாணவிகளுக்கு மாலை அணிவித்து மேளதாளத்துடன் பூக்களை தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பிறகு இந்த மாணவர்களை பள்ளிப்பட்டு நகர தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.

இந்த விழாவையொட்டி நடந்த பேச்சு போட்டி, கட்டுரை போட்டி ஆகியவைகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் கோபால் உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு