தமிழக செய்திகள்

நாமக்கல் அருகேஅரசு பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா

நாமக்கல் அருகே உள்ள என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள், திருவள்ளுவர் சிலை திறப்பு விழா, பொது தேர்வில் முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா ஆகிய முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆன்ட்ரூஸ் தலைமை தாங்கினார். முதுகலை ஆசிரியர் காளிதாஸ் வரவேற்று பேசினார். வரலாற்று பேராசிரியர் எம்.கே.ஜி காளி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து பேசினார். என்.புதுப்பட்டியை சேர்ந்த தினகரன் பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரூ.60 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கி, அனைத்து மாணவர்களையும் ஊக்கப்படுத்தி அனைத்து மாணவர்களுக்கும் திருக்குறள் புத்தகத்தை வழங்கினார். இதில் என்.புதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கவிதா சுரேஷ் குமார் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சியும் நடந்தது.

இதேபேல் நாமக்கல் அருகே உள்ள வேட்டம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜரின் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ரா தலைமை தாங்கினார். இதில் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி முதுநிலை ஆசிரியர் ஜெகதீசன் கலந்து கொண்டு காமராஜர் ஆற்றிய பணிகள் குறித்து பேசினார். இதையொட்டி கவிதை, கட்டுரை, பேச்சு மற்றும் ஓவிய போட்டி, பாடல் பாடுதல் ஆகியவற்றில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டன.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு