சென்னை,
தமிழக அரசின் காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் சூட்டி முதல்-அமைச்சர் விஜய் அறிவிப்பு வெளியிட்டதற்கு காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக பெருந்தலைவர் காமராஜர் பொறுப்பேற்று பொற்கால ஆட்சி நடத்திய போது கல்வியில் புரட்சி செய்தார். மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார்.
அதைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தி வரும் காலை உணவு திட்டத்திற்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம் என்று பெயர் சூட்டி முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இதனை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்பதோடு, பெருந்தலைவரின் புகழுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்-அமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.