தமிழக செய்திகள்

கனல் கண்ணனுக்கு விதிக்கப்பட்ட ஜாமீன் நிபந்தனை நிறுத்தி வைப்பு-ஐகோர்ட்டு உத்தரவு

கேரளாவில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ஜாமீன் நிபந்தனைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார்.

தினத்தந்தி

சென்னை,

சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு எதிரே உள்ள பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசினார். இதுகுறித்து பதிவான வழக்கில் கைதான கனல் கண்ணனுக்கு, சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

அதன்படி. 4 வாரங்களுக்கு காலை, மாலையில் இருவேளை விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று கனல் கண்ணனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், கேரளாவில் நடைபெற உள்ள படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், ஜாமீன் நிபந்தனைகளை நிறுத்திவைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் கனல் கண்ணன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா, தினமும் ஆஜராக வேண்டுமென்ற நிபந்தனையை நாளை (சனிக்கிழமை) முதல் 17-ந்தேதி வரை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை