தமிழக செய்திகள்

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து; பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

ஏற்கனவே 9 நபர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

தினத்தந்தி

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் கடந்த 22ம் தேதி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில்   தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே 9 நபர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 லட்ச ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி உதவி அளித்திருந்தார்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை