தமிழக செய்திகள்

தேர்தல் பிரசாரத்திற்கு இடையே வெள்ளகோவில் அருகே சாலையோர கடையில் தேநீர் அருந்திய கனிமொழி

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு, பொதுமக்களிடம் கனிமொழி எம்.பி. வாக்கு சேகரித்து வருகிறார்.

திருப்பூர்,

2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசார பணியில் ஈடுபட்டு வருகின்றன. திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு, பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, பல்லடம் செல்லும் வழியில் வெள்ளகோவில் அருகே ஓலப்பாளையம் ஊராட்சியில் உள்ள சாலையோர கடையில் கனிமொழி கருணாநிதி எம்.பி தேநீர் அருந்தினார்.

அவருடன் காங்கேயம் திமுக வேட்பாளரும், துணைப் பொதுச் செயலாளருமான மு.பெ.சாமிநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் இல. பத்மநாபன், அமைச்சர் கயல்விழி செல்வராஜ், திமுக மாணவர் அணி செயலாளர் வீரமணி ஜெயகுமார், திமுக மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.