தமிழக செய்திகள்

கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரி நிரம்பியது; அதிகாரிகள் தகவல்

கும்மிடிப்பூண்டி அருகே கண்ணன்கோட்டை-தேர்வாய்கண்டிகை ஏரி நிரம்பியது.

தினத்தந்தி

கிருஷ்ணா நதிநீர் திட்டத்தின் கீழ் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் நிறுத்தப்பட்டது. இதனால் ஏரிகளில் சேமிக்கப்பட்ட நீர் மூலம் சென்னைக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. 3 ஆயிரத்து 291 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் 43.21 சதவீதமும், 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் 11.93 சதவீதமும், 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் 89.88 சதவீதமும், 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 86.91 சதவீதமும், 500 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை ஏரியில் 100 சதவீதமும் நீர் இருப்பு உள்ளது.

சராசரியாக அனைத்து ஏரிகளிலும் 72.79 சதவீதம் இருப்பு உள்ளது. அனைத்து ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13 ஆயிரத்து 222 மில்லியன் கன அடியில் (13.22 டி.எம்.சி.). தற்போது 9 ஆயிரத்து 624 மில்லியன் கன அடி (9.62 டி.எம்.சி.) நீர் இருப்பு உள்ளது. இதன் மூலம் 9 மாதத்துக்கு தேவையான குடிநீர் கையிருப்பு உள்ளதாக பொதுப்பணித்துறை மற்றும் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு