தமிழக செய்திகள்

கன்னியாகுமரி: திற்பரப்பு தடுப்பணையில் மீண்டும் படகு சவாரி; சுற்றுலா பயணிகள் குதூகலம்

கன்னியாகுமரியில் 12 நாட்களுக்கு பின் திற்பரப்பு தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் படகு சவாரி செய்ய துவங்கியுள்ளனர்.

தினத்தந்தி

திருவட்டார்,

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் திற்பரப்பு என்ற ஊரில் அமைந்துள்ளது திற்பரப்பு அருவி. குமரியின் குற்றாலம் என்றும் அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, அந்த மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.

சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் திற்பரப்பு அருவியில், ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளியல் போடுவது வழக்கம். இதன்பின், அருவியின் மேற்பகுதியில் உள்ள சுற்றுலா படகுத்துறையில் படகு சவாரி செய்வதும் உண்டு.

இந்த நிலையில், கடந்த 12 நாட்களாக செயல்படாத திற்பரப்பு படகுத்துறை நேற்று முதல் இயங்க துவங்கியது. அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பணை சென்று உல்லாச படகில் சவாரி செய்து திரும்புகின்றனர்.

திற்பரப்பு அருவிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருவது, இப்பகுதியில் கடை நடத்துவோரிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது