தமிழக செய்திகள்

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்புடன் கரை ஒதுங்கினர்

ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்புடன் கரை ஒதுங்கியுள்ளனர் என தகவல் தெரிவிக்கின்றது. #TNFishermen

தினத்தந்தி

கன்னியாகுமரி,

இலங்கை அருகே இந்திய கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக குமரி கடல் பகுதிகளிலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் முட்டம், குளச்சல், தேங்காப்பட்டணம், தூத்தூர் உள்ளிட்ட 48 கடலோர கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடிப்பார்கள். இந்தநிலையில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளதையொட்டி மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் குளச்சலில் இருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் சுமார் 250க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடிப்பதை பாதியிலேயே கைவிட்டு விட்டு கரை திரும்பினர்.

இந்த நிலையில், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற கன்னியாகுமரி மீனவர்களில் சிலர் காணாமல் போனார்கள் என கூறப்பட்டது. இந்த நிலையில், காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்கள் 51 விசை படகுகளில் பாதுகாப்புடன் கரை ஒதுங்கியுள்ளனர்.

கர்நாடகாவில் 30, லட்சத்தீவில் 16, கோவா கடற்கரையில் 5 விசைப்படகுகள் கரை ஒதுங்கி உள்ளன. 51 விசை படகுகளில் 3 இடங்களில் கன்னியாகுமரி மீனவர்கள் பாதுகாப்புடன் கரை ஒதுங்கி உள்ளனர் என வருவாய் நிர்வாக ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு