வால்பாறை
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட் பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இதை கருத்தில் கொண்டு வால்பாறை நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணியாளர்கள் மூலம் காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி வருகின்றனர். பஸ்சில் அமர்ந்துள்ள மாணவர்களுக்கு அங்கேயே கொண்டு சென்று வழங்கப்படுகிறது. இதற்கு பெற்றோர் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.