தமிழக செய்திகள்

கார்கில் வெற்றி தினம்: வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கார்கில் வெற்றி தினத்தில் வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர் கொண்டு முறியடித்தனர். இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் கார்கில் வெற்றி தினத்தில் தேசத்தை காத்த வீரர்களின் வீரத்தையும், தியாகத்தையும் போற்றுவோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "25-வது கார்கில் வெற்றி தினத்தில், ஈடு இணையற்ற துணிச்சலுடன் நமது தேசத்தைக் காத்த வீரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம். நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அவர்களின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் நினைவு கூர்வோம்" என்று தெரிவித்துள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை