தமிழக செய்திகள்

கார்த்திகை தீபத்திருவிழா: திருவண்ணாமலை கோவிலில் ஏற்றப்பட்ட பரணி தீபம்

கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணாமலை,

சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் மற்றும் மகா தீபம் இன்று ஏற்றப்படுகிறது.

அதன்படி இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக தீப கொப்பரைக்கு திறப்பு பூஜை நடத்தப்பட்டு 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இன்றைய தினம் நீதிமன்ற உத்தரவின்படி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 பேரும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று திருவண்ணாமலை பகுதியில் பரவலான மழைப்பொழிவு இருந்து வந்த நிலையில், இன்று காலை மழை சற்று குறைந்துள்ளது. மேலும் மகாதீபத்தை தரிசனம் செய்ய திரளான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்