திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று மாலை 6 மணிக்கு திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு மகாதீபத்தை தரிசனம் செய்தனர்.
தீபம் ஏற்றுவதற்காக பயன்படுத்தப்படும் தாமிர கொப்பரை மூன்றை அடி உயரமும், இரண்டரை அடி அகலமும் கொண்டது ஆகும். இதற்காக மலை அடிவாரத்தில் இருந்து சுமார் 150 அடி உயரத்தில் மலையில் உள்ள உச்சிப்பிள்ளையார் கோவில் வளாகத்தில் தீபமேடை வர்ணம் பூசப்பட்டு தயார்படுத்தப்பட்டிருந்தது. மகாதீபம் ஏற்றுவதற்காக 350 லிட்டர் நெய், 150 மீட்டர் காடா துணியிலான மெகாதிரி, 5 கிலோ கற்பூரம் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளது.