தமிழக செய்திகள்

கருணாநிதி பிறந்தநாள் விழா

காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாள் விழா நடந்தது.

தினத்தந்தி

காவேரிப்பாக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரியில் காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதியின் 100-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

காவேரிப்பாக்கம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஓச்சேரி பாலாஜி தலைமை தாங்கினார். ஒன்றிய அவைத்தலைவர் லட்சாதிபதி, மாவட்ட கவுன்சிலர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அங்கு கூடியிருந்த பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதில் ஒன்றிய துணைச்செயலாளர்கள் வேதாந்தம், பூரி அன்பரசு, பரமேஸ்வரி, ஒன்றிய பொருளாளர் கார்த்திகேயன், மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம், ஜாகீர் உசேன், மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கோவிந்தன், மாவட்ட தொண்டரணி தலைவர் வெங்கடேசன், ஓச்சேரி சதீஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது