தமிழக செய்திகள்

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்

கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

இளையான்குடி

இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஒன்றிய செயலாளர் செல்வராஜன் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

மேலும் நாம் தமிழர் கட்சியின் கலைவாணி ராஜா தலைமையிலும் மற்றும் மாற்று கட்சியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் சுப.மதியரசன், வெங்கட்ராமன், தமிழ்மாறன், சேங்கை மாறன், சாத்தையா, ரவிச்சந்திரன், நைனா முகம்மது, கணேசன், கஸ்பார், சாமிவேல், யுகநாதன் அய்யாசாமி, கான் முகமது, யாசின், ராஜ்குரு மற்றும் நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதே போல சூராணத்தில் ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன் தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட துணை செயலாளர் சேங்கை மாறன், தலைமை கழக பேச்சாளர் தக்கோலம் தேவபாலன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சுப.மதியரசன், மாரியப்பன் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு