கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ, கல்வி உதவி நிதியாக தலா ரூ.25 ஆயிரம்: மு.க.ஸ்டாலின் வழங்கினார்

கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவ, கல்வி உதவி நிதியினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக, தலைவர் கருணாநிதி தனது சொந்த பொறுப்பில் அளித்த ரூ.5 கோடியினை வங்கியில் வைப்பு நிதியாக போடப்பட்டு, அதில் கிடைக்கப்பெறும் வட்டித் தொகையினைக் கொண்டு, மாதந்தோறும் ஏழை - எளிய, நலிந்தோருக்கு உதவித்தொகையாக 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு வட்டியாக கிடைத்த தொகையில் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக சென்னை அந்தோணிதாஸ் உள்பட மொத்தம் 8 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சத்தை மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்