தமிழக செய்திகள்

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடல்: மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதியின் உடலுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். #Karunanidhi #RIP

தினத்தந்தி

சென்னை,

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்றிலிருந்து அவருடைய உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டது. மருத்துவமனையும் உறுதிசெய்தது. கடந்த 11 நாட்களாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார்.

காவேரி மருத்துவமனையில் இருந்து இரவு 9.20 மணியளவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல், கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. வழி நெடுக தொண்டர்கள் வெள்ளத்தில் மிதந்த படி கருணாநிதியின் உடல், ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச்செல்லப்பட்டது. பின்னர் கோபாலபுரம் கொண்டு செல்லப்பட்ட கருணாநிதியின் பூத உடல் அங்கு குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்தார். பின்னர் கோபாலபுரம் வீட்டிற்கு விரைந்த அவர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு