தமிழக செய்திகள்

"பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர்"... - மத்திய அரசுக்கு நெல்லை எம்.பி. கடிதம்

பரந்தூர் விமான நிலையத்துக்கு கருணாநிதி பெயர் சூட்ட வேண்டும் என்று, நெல்லை எம்பி ஞான திரவியம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

காஞ்சீபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் 2-வது மிகப்பெரிய பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதற்கான அறிவிப்பினை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு அதற்கான பணிகளை தொடங்கி உள்ளது. பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர்ந்து 60-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பரந்தூரில் அமைய இருக்கும் விமான நிலையத்திற்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்று, நெல்லை எம்பி ஞான திரவியம் வலியுறுத்தியுள்ளார். ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்து துறைக்கு அவர் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அதில், வளர்ந்த நாடுகளில் இருப்பது போன்று, சென்னையில் அமைய இருக்கும் இரண்டாவது விமான நிலையத்துடன், ரெயில் நிலையத்தையும் ஒருங்கிணைத்து அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இந்த திட்டத்திற்கு முன்னாள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்