சென்னை,
திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எனது தொகுதி மேம்பாட்டு பணிகளிலும், கொரோனா விழிப்புணர்வு மற்றும் நிவாரண பணிகளில் கலந்து கொண்டதன் விளைவால் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. கடந்த 6-ந்தேதி சென்னை கிங்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். அரசு டாக்டர்கள், நர்சுகள் என்னை ஆக்கப்பூர்வமாக கவனித்தனர். தற்போது, கொரோனா இல்லாமல் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி உள்ளேன். எனக்கு உதவிய டாக்டர்கள், நர்சுகள், உடல்நிலை குறித்து விசாரித்த முதல்-அமைச்சர், மத்திய சுகாதாரத்துறை மந்திரி, மாநில சுகாதாரத்துறை அமைச்சர், எனக்காக பிரார்த்தனை செய்த எனது தொகுதி மக்களுக்கும் மற்றும் அனைத்துத் தமிழ் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.