தமிழக செய்திகள்

'உங்களால் தோற்றோம்' என்ற எண்ணம் எங்களுக்கும் உள்ளது- சி.வி.சண்முகத்திற்கு கே.டி.ராகவன் பதில்

'உங்களால் தோற்றோம்' என்ற எண்ணம் எங்களுக்கும் உள்ளது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்திற்கு கே.டி.ராகவன் பதில் அளித்து உள்ளார்.

தினத்தந்தி

சென்னை

சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க .கூட்டணியில் இடம் பெற்ற பா.ஜனதா 20 இடங்களில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வெற்றி பெற்று 20 ஆண்டுகளுக்குப் பின் சட்டசபைக்குள் நுழைந்து உள்ளது

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் வானூரில் ஒன்றிய அ.தி.மு.க சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அ.தி.மு.க.வின் தோல்விக்கு, பா.ஜனதாவுடனான கூட்டணியே காரணமே என தெரிவித்திருந்தார்.

இந்த கருத்து சர்ச்சையான நிலையில், இதற்கு பா.ஜனதா வின் மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் டுவிட்டரில் பதிலடி அளித்துள்ளார்.

சி.வி.சண்முகத்தின் டுவிட்டர் கணக்கை டேக் செய்து பதிவிட்டுள்ள கே.டி.ராகவன், அ.தி.மு.க.வால்தான் பா.ஜனதா தேற்றது என்ற எண்ணம் தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்