தமிழக செய்திகள்

நெல்லையில் பொதுமக்களிடம் ஆன்லைன் மூலம் பணமோசடி: கேரள வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

"கணினிவெளிச் சட்டக்குற்றவாளியான" கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் நெல்லை மாநகரில் பொதுமக்களை ஏமாற்றி போலியான வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த ஆசையைத் தூண்டியுள்ளார்.

தினத்தந்தி

"கணினிவெளிச் சட்டக்குற்றவாளியான" கேரளா மாநிலம், மலப்புரம் மாவட்டம், கிடங்காயத்தைச் சேர்ந்த மிக்தாத் மகன் ராசித் (வயது 27) என்பவர் திருநெல்வேலி மாநகரில் ஆன்லைன் முதலீடு செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என பொது மக்களை நம்பச் செய்து போலியான வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்த ஆசையைத் தூண்டியுள்ளார். மேலும் அவர் ஆன்லைன் மோசடி செய்து பொதுமக்களிடம் பணத்தை ஏமாற்றும் செயலில் ஈடுபடுவதன் மூலம் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவித்து வந்துள்ளார்.

இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தலைமையிடம்) விஜயகுமார், போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு சைபர் கிரைம்) செந்தாமரைக்கண்ணன், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவுப்படி நேற்று ராசித் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டார். 

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை