தமிழக செய்திகள்

ரூ.4¼ லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்

உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.4½ லட்சத்தில் கொப்பரை தேங்காயம் ஏலம் போனது.

தினத்தந்தி

பனமரத்துப்பட்டி:-

சேலம் உத்தமசோழபுரம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன் தலைமையில் நடந்தது. தேசிய வேளாண் மின்னணு சந்தை இணையதளம் மூலம் நடந்த ஏலத்தில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.62-க்கும், அதிகபட்சமாக ரூ.80.36-க்கும் விற்பனையானது. மொத்தம் 5.62 டன் அளவுள்ள 124 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.4 லட்சத்து 25 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்பிரமணி தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து