தமிழக செய்திகள்

கொடைக்கானல் பெரியாற்றில் வெள்ளம் - விவசாயிகள் தவிப்பு

கொடைக்கானல் பேத்துப்பாறை பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் ஆற்றை கடக்க முடியாமல் விவசாயிகள் தவித்தனர்.

தினத்தந்தி

கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை மற்றும் பாரதி அண்ணா நகர் சுற்றுப்புற விவசாய நிலத்தில் இருந்து, விளை பொருட்களை பெரியாற்றை கடந்து விவசாயிகள் தலைச்சுமையாக கொண்டு வருவது வழக்கம்.

அவ்வாறு அக்கரைக்கு விவசாய பணிகளுக்கு செல்லும் விவசாயிகள் திடீரென்று பெய்யும் மழையால் காட்டாற்று வெள்ளம் வந்து ஆற்றைக் கடக்க முடியாமல் அவதியுறும் சூழல் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று கொடைக்கானலில் பெய்த கனமழையால் அக்கரைக்கு வேலைக்கு சென்ற பெண்கள் மற்றும் விவசாயிகள் என பலர் ஆற்றைக்கடக்க முடியாமல் கூடாரத்தில் தங்கும்நிலை ஏற்பட்டது. இதே போன்று அவதியுற்ற கள்ளக்கிணறு கிராமத்தில் இரும்பு பாலம் அமைத்தது போல் இப்பகுதியிலும் பாலம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு