கோவை,
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவையில் சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர்.
கொடநாடு வழக்கு தொடர்பாக இதுவரை 30-க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், கொடநாடு எஸ்டேட் உடன் தொடர்புடையவர் என்ற அடிப்படையில் விவேக் ஜெயராமனிடம் விசாரணை நடத்தப்பட்டது. சுமார் 3 மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது.